
தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குமாரசாமிபுரம் மற்றும் கண்ணகி நகர் ஆகிய இரு கிராமங்களில் உள்ளவர்களுக்கு இடையே நேற்றைய தினம் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது மோதலாக மாறியது.
தருமபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், பலர் வாள்களுடன் கானப்பட்டதையடுத்து நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக வான் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட பலர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் தர்மபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
[embedded content]

