வடகிழக்கு தமிழ்பேசும் மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வினை பெற்றுத்தருமாறு வழியுறுத்தி வடக்கு கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் குரல்வழிப் போராட்டத்தின் 51வது நாளான இன்று செவ்வாய்கிழமை (20) கிண்ணியா – ஆலங்கேணி பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் பெண்கள் அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, 100 நாள் செயல்முனைவு எனும் திட்டத்தின்கீழ் இடம்பெற்றும் வரும் இவ் குரல்வழிப் போராட்டத்தை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாடு செய்து வடகிழக்கு மாகாணங்களில் நடாத்தி வருங்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் சிறுபான்மை மக்களுக்கான அரசியல் உரிமையை வழங்கு, எமது நிலம் எமக்கு வேண்டும், பேச்சு சுதந்திரம் எமது உரிமை, ஒன்று கூடுவது எமது உரிமை, பெண்கள் உரிமையை பாதுகாப்போம் உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






பிறசெய்திகள்
- நாட்டில் எந்தவொரு குடிமகனும் பட்டினி கிடக்கக்கூடாது! – அரச நிறுவனங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
- தாமரை கோபுரத்தை பார்வையிட படையெடுக்கும் அதிகளவான மக்கள்!
- இரத்மலானை விமான நிலைய சேவைகள் இடைநிறுத்தம்
- விகாரைகள், மத ஸ்தலங்கள் இருள் சூழ இடமளிக்க முடியாது! – சபாநாயகர்
- இலங்கையில் சீமெந்துக்கு ஏற்பட்ட நிலை!
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka





