எதிர்காலத்தில் நெருக்கடி மோசமடையும்

நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகள் தற்காலிகமாக குறைந்துள்ள போதிலும் எதிர்காலத்தில் இதனைவிடவும் நெருக்கடி நிலைமைகளை எதிர்கொள்ள நேரிடும்.

இவ்வாறு காலி – அபரகட பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும்போது சபாநாயகர் மஹிந்த யாப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து அரசியல் நெருக்கடியாக மாறிவருவதை அவதானிக்க முடிகின்றது. எரிபொருள், உணவு மற்றும் மருந்துவகைகளின் விலைகள் அதிகரித்துச் செல்கி்றது.  விலை அதிகரிப்புக்கு மத்தியிலும் அவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

நாட்டில் நாளாந்தம் மின்வெட்டு தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது. மின்சாரக் கட்டணம் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

கட்டுப்படுத்த முடியாத நிலைமை உருவாகினால் பௌத்த மகா சங்கத்தினராலோ அல்லது ஆட்சியாளர்களினாலோ ஒன்றும் செய்ய முடியாத நிலைமை உருவாகும்.
அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுவதனை தவிர்க்க பொறுப்புணர்ந்து செயற்படுவது அனைவரினதும் கடமையாகும்– என்றார்.

Leave a Reply