
சுகாதாரம், கல்வி, நெடுஞ்சாலைகள், வீடமைப்பு போன்ற அமைச்சுக்களின் ஒப்பந்தகாரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு செலுத்தவேண்டிய நிலுவைத் தொகை 20 ஆயிரம் கோடிக்கு மேல் காணப்படுகிறது என அரச வட்டாரத் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
பணப்பற்றாக்குறை காரணமாக அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபன சபைகளின் அத்தியாவசிய செயற்பாடுகளைக் கூட முன்னெடுப்பதில் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளது.
அமைச்சுக்களில் புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது மட்டுமன்றி ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களைப் பராமரிப்பதிலும் கடும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடுகிறது.
பல அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்கள ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும் பணப்பற்றாக்குறை நிலவுகிறது.
சுகாதாரம், கல்வி, நெடுஞ்சாலைகள், வீடமைப்பு போன்ற அமைச்சுக்களின் ஒப்பந்ததாரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை இருபதாயிரம் கோடிக்கு மேல் இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவளை இரண்டு அரச வங்கிகளிலிருந்தும் நிதி விடுவிக்கப்படாததால், நெல் சந்தைப்படுத்தல் சபையும் நெல் கொள்முதல் செய்வதை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





