பிரபாகரன் வீட்டை வல்வெட்டி நகரசபை கையப்படுத்தும்?

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரன் பிறந்த வல்­வெட்­டித்­துறைப் பகு­தி­யில் அமைந்­துள்ள அவ­ரது வீட்­டுக் காணிக்கு வல்­வெட்­டித்­துறை நகர சபை­யால் சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

‘இந்த ஆத­னம் எவ­ரா­லும் பரா­ம­ரிப்­பற்ற நிலை­யில் இருப்­ப­த­னால் நுளம்பு பெரு­கும் இடங்­க­ளாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­மை­யால் இந்த ஆத­னத்­தின் உரி­மை­யா­ளர் அல்­லது பரா­ம­ரிப்­பா­ளர், எவ­ரும் இருப்­பின் உட­ன­டி­யாக துப்­ப­ரவு செய்து நுளம்பு பெரு­கும் இடங்­கள் இல்லை என்­பதை உறு­திப்­ப­டுத்தி நாளை மறு­தி­னம் 22ஆம் திக­திக்­குள் 0212263973 எனும் தொலை­பேசி இலக்­கத்­துக்கு தெரி­யப்­ப­டுத்­த­வும்.

இல்­லை­யெ­னில் இவ்­வ­றி­வித்­தலை அலட்­சி­யம் செய்­யும் பட்­சத்­தில் இந்த ஆத­னம் எம்­மால் பொறுப்­பேற்­க­ப­டும்’ என தெரி­வித்து வல்­வெட்­டித்­துறை நக­ர­ச­பைத் தவி­சா­ள­ரால் சிவப்பு எச்­ச­ரிக்கை காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இது குறித்து வல்­வெட்­டித்­துறை நக­ர­சபை தவி­சா­ளர் இரா­மச்­சந்­தி­ர­னி­டம் தொடர்பு கொண்டு கேட்­ட­போது, அந்­தப் பகுதி மக்­க­ளால் எமக்கு நிறைய முறைப்­பா­டு­கள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. உட­ன­டி­யாக துப்­ப­ர­வுக்கு முற்­பட்­டால் பொலிஸ், இரா­ணு­வப் பிரச்­சி­னை­கள் ஏற்­ப­டும்.

சிவப்பு அறி­வித்­தலை காட்­சிப்­ப­டுத்தி அதன் பின்­னர் நக­ர­சபை அதனை தொடர்ச்­சி­யாக சுத்­தம் செய்­யும். காணி­யின் உரி­மை­யா­ளர்­கள் எவ­ரே­னும் பின்­னர் உரிமை கோரும் பட்­சத்­தில் அதற்­கு­ரிய பரா­ம­ரிப்பு செல­வு­டன் மீள வழங்­கப்­ப­டும்=என்­றார்.

தமிழ்த் தேசி­யக் கட்­சி­யின் செய­லா­ளர் நாய­க­மும், முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான, எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் கருத்து தெரி­விக்­கும் போது, ’வல்­வெட்­டித்­து­றை­யில் எத்­தனை காடு­கள் பற்­றை­கள் வளர்ந்­துள்­ளன? அனைத்­துக்­கும் நக­ர­ச­பை­யால் சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளதா? நானே குறித்த காணி­யைப் பொறுப்­பெ­டுத்து துப்­ப­ரவு செய்­கின்­றேன்’ என்­றார்.

Leave a Reply