
கொழும்பு, செப்.20
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளரை (உள்ளூராட்சி) ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் இன்று (20) சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
இன்று தொடக்கம் தேர்தல் நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் என்றும், எனவே இன்று கலந்துரையாடலுக்கு வருகைத் தந்ததாக ரஞ்சித் மத்தும பண்டார ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பிரதம செயற்பாட்டு பிரதானி நளின் பண்டார, ஊடகப் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் ஆகியோர் கலந்து கொண்டனர்.





