
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட குழுவினர் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்றிருந்தனர்.
மக்கள் கருத்துக்களை நடைமுறைப்படுத்தாமை காரணமாக உடனடியாக உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, உள்ளுராட்சி மன்றங்களின் அதிகார காலம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
எனினும், அதற்கு தேர்தலை நடத்தாது, அமைச்சர்களின் உதவியுடன் அது மேலும் ஒரு வருடத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.
இதனால் மக்களின் ஆணை இல்லாது செய்யப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்குரிய திகதியினை வெளியிடுவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளது.
எனவே, மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்கும் வகையில் குறித்த தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.
பிறசெய்திகள்





