
தேசிய பேரவை அரசியல் உத்தி அல்ல, அரசியல் தந்திரம் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான அவசர அறிவிப்பு
கொள்கை வகுப்பாளர்களாக பார்க்கும் போது தேசிய அரசாங்கங்கள் என்பது புதிய கருத்தல்ல எனவும் அரசியலமைப்பில் தேசிய பேரவை பற்றி குறிப்பிடப்படவில்லை.
மேலும், தேசிய பேரவைக்கு நிறைவேற்று அதிகாரம் இல்லை எனவும், அது ஒரு அரசியல் கெடுபிடி மட்டுமே எனவும், இந்தக் கருத்தை ஒரு குழுவாக நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை 12 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு வேளை உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பட்டினியால் வாடும் குழந்தைகளுக்கு விசித்திரக் கதைகள் கூறுவது போன்று காணப்படுகின்றது.
இந்நிலையில் அரசாங்கம் நேர்மையாக செயற்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்களாக ஒன்றிணைந்து பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பிறசெய்திகள்





