விவசாய அமைச்சுக்கு சொந்தமான ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி கோய்கொடகமகே பந்துல நியமிக்கப்பட்டுள்ளார்.
விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
பந்துல ருஹுனு பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் கலாநிதி பட்டமும், இங்கிலாந்தில் விவசாயத்தில் MSc பட்டமும், ருஹுனு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான இளங்கலை பட்டமும் பெற்றுள்ளார்.
மேலும், சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை, தேசிய உணவு ஊக்குவிப்பு சபை, இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் உட்பட பல நிறுவனங்களின் சபை உறுப்பினராக திரு.பந்துல பணியாற்றியுள்ளார்.
ஹெக்டர் கொப்பேகடுவவை விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நியமிப்பதற்கு உயர் பதவிகளுக்கான அதிகாரிகளை நியமிப்பதற்கான ஜனாதிபதி குழுவினால் கலாநிதி கோய்கொடகமகே பந்துலவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிறசெய்திகள்





