
தியாக தீபன் திலீபனின் வரலாறு என்பது தமிழ் ஈழ விடுதலை போராட்டத்தின வரலாறாக இருக்கின்றது. இவர் மக்களுடைய விடுதலைக்காக ஜனநாயக வழியிலே அகிம்சை போராட்டத்தினை ஆரம்பித்து வீர மரணத்தை தழுவிக்கொண்டவர்.
களத்தில் மடிந்த மாவீரர்களை அரசியல் ரீதியான தேவைகளுக்கு பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டு வந்தது.அவர்களின் தியாகங்கள் என்பது போற்றப்பட வேண்டியது.எனவே அவர்களை குல தெய்வங்களாக கௌரவித்து பூஜித்து வந்திருக்கின்றோம் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் கதிர் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய சூழலில் போராளிகளை நினைவு கூருவது என்பது விடுதலை புலிகளாகிய எங்களின் கடமையாகும். இதனை எங்களது தாயக மண்ணிலே செய்வதற்கு அரசியல் கட்சிகளுடைய தலையீடு எங்களுக்கு இடையூறாக இருக்கின்றது.
அண்மையில் திலீபனின் நினைவுத்தூபி அமைந்திருக்கின்ற இடத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலையீடு என்பது மிக மோசமான ,கீழ்த்தரமாக இருந்தது.
தங்களின் கட்சி அரசியலுக்காக பயன்படுத்துவதற்காக தீவிரமான முயற்சியில் அவர்கள் ஈடுபடுட்டிருந்தார்கள்.
தாயகப் பகுதியில் இருக்கின்ற உங்களின் அலுவலகங்கள் , வாழ்விடங்கள் அனைத்தும் ஆயிரக்கணக்கான போராளிகளால் முற்றுகை இடப்பட்டு வெளியேற்றப்படுவீர்கள் என எச்சரிக்கின்றேன்.
போராட்டம் என்பது மக்களின் விடுதலைக்காக,தமிழ் ஈழ விடுதலை புலிகளால் முற்றுமுழுதாக தலைமைத்துவம் வழங்கப்பட்டு வழிநடத்தப்பட்டது.தமிழ் தேசிய குழுக்கள் போன்ற குழுக்களால் இன்று தலைமைத்துவம் சிதைவுற்று இருக்கின்றது.
போராளிகள் எடுத்த வகுப்பில் தான் இன்று நீங்கள் நிற்கிறீர்கள்.இதனை தெளிவாக புரிந்துகொள்ள,வேண்டும்.உங்கள் அரசியலுக்காக தமிழ் தேசியத்தை விற்று பிழைக்காதீர்கள்.
எதிர் காலத்தில் எங்கள் மக்களுக்காக உண்மையான,நேர்மையான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு நாங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றோம். விடுதலைப் புலிகள் செத்திட்டாங்கள் ,நாங்கள் தான் இனி தமிழ் தேசியவாதிகள் என்று தலை தூக்கிக்கொண்டு வர கூடாது.ஒரு போதும் நாங்கள் ஒத்துழைப்பு வழங்க மாட்டோம்.
நீங்கள் போராட்டத்தில் இருந்து ஒழிந்து ஓடி உங்கள் உயிருக்குப் பயந்து சட்டத்துறையில் கல்வி கற்றீர்கள்.நாங்கள் போராடியதால் தான் நீங்கள் அரச அங்கீகாரம் பெற்று வந்து நிற்கிறீர்கள்.எங்களுக்கு தேசத்தின் அங்கீகாரம் இருக்கிறது அதை நீங்கள் தட்டிப் பறித்துக்கொண்டு உங்கள் அரசியலுக்கு கொண்டு போவதனை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.என்றார்.
பிறசெய்திகள்





