
2022 ஆம் ஆண்டில் உணவுப் பொருள்களின் விலையேற்றம் அதிகமாக உள்ள நாடுகளில் முதல் 10 நாடுகளில் இலங்கை 4ஆம் இடத்தில் இடம்பெற்றுள்ளது.
செப்ரெம்பர் 2021 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு ஓகஸ்ட் வரை 53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு தொடர்பான அண்மைய ஆய்வறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது.
அதில் உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள 10 நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது.
2021ஆம் ஆண்டு செப்ரெம்பரில் 9.9 வீதமாக இருந்த இலங்கையின் உணவுப் பணவீக்கம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான நான்கு மாத காலப்பகுதிக்குள் 91 சதவீதமாக உயர்வடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
சிம்பாவே 353 வீதத்துடன் முதலாமிடத்திலும் லெபனான் 240 வீதம் வெனிசுலா 131 வீதம் ஆகியவற்றுடன் இரண்டாம் ,மூன்றாமிடத்திலும் உள்ளன.





