<!–
இலங்கையில் ஏற்பட்டுள்ள உணவுப் பிரச்சினையால் மக்கள் மேலும் அவதிக்குள்ளாகி வருவதுடன், அன்றாட நடவடிக்கைகளும் தடைபட்டுள்ளதாக உணவக உரிமையாளர்களின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உணவுப் பிரச்சினையால் பாடசாலை மாணவர்கள் மற்றும் வேலையில் இருப்பவர்கள் சரியான போஷாக்கைப் பெறுவதில்லை என்றும் எனவே, அவர்கள் தமது பணிகளைச் சரியாகச் செய்வதற்குக்கூட பலம் இல்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






