வீட்டுக்குள் இறங்கிய சிவாஜிலிங்கம் – துப்பரவுப் பணிகள் தீவிரம்

விடுதலைப் புலிகளின் தலைவரின் வீடு அமைந்திருந்த காணியினை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் ஊர் மக்கள் இணைந்து சிரமதானம் மூலம் துப்பரவு பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம்இ வல்வெட்டித்துறை பகுதியில் அமைந்துள்ள தலைவரின் வீட்டுக் காணிக்கு வல்வெட்டித்துறை நகர சபையினால் சிவப்பு எச்சரிக்கை ஒட்டப்பட்டுள்ளது.

காணியில் இருந்த வீடு முற்றாக அடித்து அழிக்கப்பட்ட நிலையில் காணி பராமரிப்பின்றி கைவிடப்பட்டுள்ளமையால் அப்பகுதியில் பற்றைகள் வளர்ந்துள்ளன.

பற்றைகளினால் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் உள்ளது என சுட்டிக்காட்டி குறித்த காணியினை உடனடியாக துப்புரவு செய்ய வேண்டும் எனவும் இல்லாவிடின் குறித்த ஆதனத்தை நகர சபை கையகப்படுத்தும் என அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று சிவாஜிலிங்கம் தலைமையில் ஊரவர்கள் ஒன்றிணைந்து சிரமதானம் மூலம் காணியில் துப்பரவு பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

பிறசெய்திகள்

Leave a Reply