நிலைபேறான அபிவிருத்தி தொடர்பிலான செயலமர்வு

நிலைபேறு அபிவிருத்தி இலக்குகள் தொடர்பிலான பயிற்சிநெறியொன்று தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (20) இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த செயலமர்வில் வளவாளராக கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.பாயிஸ் கலந்து சிறப்பித்தார்.

இதில் ஐக்கிய நாடுகள் 2030 நிகழ்ச்சி நிரல் திட்டம் மற்றும் 17 குறிக்கோள்களை மையமாக வைத்து விளக்கமளிக்கப்பட்டது. நிலைபேறு அபிவிருத்தி என்றால் என்ன? ,நிலைபேறு அபிவிருத்தி உருவாக்கம், மிலேனியம் அபிவிருத்தி குறிக்கோள், இலங்கையின் நிலைபேறான அபிவிருத்தி,மாகாண நிலைபேறான அபிவிருத்தி உட்பட பல விடயங்கள் இதன் போது தெளிவூட்டப்பட்டது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையின் போது நிலைபேறான அபிவிருத்தி தொடர்பிலான அதன் தாக்கங்கள் எவ்வாறு வலுப்பெற்றுள்ளது தொடர்பிலும் வளவாளரால் மிக தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது

இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், வெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பிறசெய்திகள்

Leave a Reply