
தமழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குச் சொந்தமான வீடு அன்று தொடக்கம் இன்று வரை பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த வருகிறது என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
குறித்த, இந்த விடயம் தொடர்பில் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குச் சொந்தமான வீடு அன்று தொடக்கம் இன்று வரை பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த வருகிறது. 1969 ஆம் ஆண்டு ஆரம்பித்த பிரச்சினை இன்று வரை தொடர்ந்து செல்கிறது.
செல் தாக்குதல் உட்பட பல்வேறு வழிகளில் நிலை குலைந்திருந்த குறித்த வீட்டை ,2009 ஆம் ஆண்டு போரை முடிவுக்கு கொண்டு வந்த அரசு தரை மட்டமாக்கியது.ஏன்னென்றால் பலரும் இங்கே வந்து நினைவாக மண் அள்ளிச் சென்றனர்.
அதை பொறுக்க முடியாமல் இந்த வீடு அழித்து தரைமட்டம் ஆக்க்கப்பட்டது.அதன் பின்னர் இந்த இடம் ,நகர சபையின் டெங்கு அறிவித்தலை அடுத்து ,துப்பரவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இது தலைவரின் மூத்த சகோதரியின் சொத்தாக தற்போது காணப்படுகிறது.ஆகவே இதில் வேறு என்ன விடயங்களை செய்யலாம் என நாம் சிந்திக்கின்றோம் என்றார்.
பிறசெய்திகள்





