திரிபோஷாவில் விஷம்: மீளப் பெறும் பணிகள் தீவிரம்

கொழும்பு, செப். 21: இலங்கையில் சிறு குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்காக சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள திரிபோஷாவில் ஃபலரொக்சின் அளவு அதிகமாக இருப்பதால் அதை மீண்டும் சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் “நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களில் இருந்து சிசுக்கள் மற்றும் தாய்மார்களுக்கு விநியோகிக்கப்படும் திரிபோஷாவில் அடங்கியிருக்க வேண்டிய அளவை விட அஃபலரொக்சின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், இது நச்சுத்தன்மை உடையதாகியுள்ளது.

குறிப்பாக குழந்தைகளுக்கான திரிபோஷ உணவில் அதிகளவான நச்சுத்தன்மை வாய்ந்த மூலம் பொருள் அடங்கியிருந்தமை தெரியவந்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார உத்தியோகத்தர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்ட பெரும்பாலான உணவுப் பொருட்கள் தற்போது விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், விநியோகிக்கப்பட்ட பெரும்பாலான உணவுப் பொருட்களை குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் உட்கொண்டுள்ளனர்.
இது மிகவும் ஆபத்தான மற்றும் துரதிர்ஷ்டவசமான நிலைமையாகும் என்றார் அவர்.

Leave a Reply