திருகோணமலை நகராட்சி மன்றத்தை மாநகரசபையாக தரமுயர்த்தும் போது எல்லை பிரிப்பில் சபையில் பல தசாப்தங்களாக இணைக்கபட்டிருந்த அன்பு வழிபுர வட்டாரம் பட்டணமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குள் இணைக்கபட்டமையை எதிர்த்து திருகோணமலை நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேற்று 20ம் திகதி காலை சபையின் தலைவர் நா.இராஜநாயகம் தலைமையில் 54வது; மாதாந்த சபை அமர்வு நடைபெற்ற போது அன்புவழிபுரம் வட்டார உறுப்பினர் வடமலை ராஜ்குமார் கொண்டு வந்த விசேட பிரேரனையின் மூலமாக குறித்த தீர்மானம் நிறைவேற்றபட்டது.
தனது பிரேரனையை அவர் இவ்வாறு முன் வைத்தார்.
கடந்த 05 செப்டம்பர் 2022 இலங்கை ஜனநாயக சோலிச குடியரசின் வரத்தமானி பிரகடனத்தின் படி திருகோணமலை நகராட்சி மன்றம் 20 மார்ச் 2023 அமுலுக்கு வரும் வகையில் மாநகர சபையாக தரமுயர்த்தபட்டுள்ளது.
இதன் எல்லை நிர்ணயத்தின் போது நகரசபை ஆரம்பிக்கப் பட்ட காலம் முதல் சபையோடு இணைந்திருந்த முதலாம் வட்டாரமான அன்புவழிபுரம் வட்டாரம் நகரசபையில் இருந்து பிரிக்கபட்டு பட்டனமும் சூழலும் பிரதேச சபையும் இணைக்கப்பட்டுள்ளமை திட்டமிட்ட அடிப்படையில் இந்த மாநகரசபை என்ற பெயரில் இடம் பெருகின்ற சதியாக நாம் கருதுகின்றோம்.
நகரசபையாக இருக்கும் தமது பிரதேசம் மாநகரசபையாக தரமுயரும் போது பிரதேசத்தின் அபிவிருத்தி வரி செலுத்தவோருக்கான வரப்பிரசாரங்கள் அவர்களின் ஆதனங்களின் பெருமதி உயர்வு என்று மகிழ்ச்சியில் இருந்த மக்களை பின் தள்ளி ஒரு பிரதேசசபை எல்லைக்குள் இணைப்பதன் மூலம் தரத்தில் பின் தள்ளும் இந்த செயற்பாட்டை பிரதேச மக்களின் சார்பில் நாம் வன்மையாக எதிர்க்கின்றோம்..
மேலும் எமது நகரசபைக்கு சொந்தமாக நகர எல்லைக்குள் உள்ள இரண்டாவது பெரிய சந்தையான அனுராதபுரசந்தி சந்தைக் கட்டிட தொகுதி மற்றும் நகரசபை விடுதி தொகுதிகள் 05 போன்றன பிரதேச சபை எல்லைக்குள் பறிபோகின்ற நிலை உருவாகிறது. இதனை ஒரு போதும் நாம் ஏற்க முடியாது.
எனவே இந்த எல்லை பிரிப்பின் மூலம் பாதிக்கப்படுகின்ற நகரசபையின் உயரிய சபையான இந்த சபையின் மூலம் எடுக்கப்படுகின்ற தீரமானத்தை ஜனாதிபதி பிரதமர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பற்றும் எல்லை நிர்ணயக்குழு உறுப்பினர்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் போன்றோருக்கு அனுப்பி வைக்குமாறு ‘மாநகரசபையாகும் திருகோணமலை நகராட்சி மன்ற எல்லைக்குள் முதலாம் வட்டாரமான அன்புவழிபுரம் உள்வாங்கபட்டவேண்டும்’ என்ற தீரமானம் நிறைவேற்றபட்டது.
இந்த தீர்மானத்தை முன்னாள் நகராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி செல்வராஜா வழிமொழிந்து தீரமானம் ஏகமனதாக நிறைவேற்றபட்டது. இந்த தீரமானத்திற்கு ஆதரவாக உப தவிசாளர் காளிராசா கோகுல்ராஜ் ,உறுப்பினர்களான லோ.கனகேஸ்வரன் , த.கௌரிமுகுந்தன், க.ஜெயபிரகாஷ் ,பி.டபில்யூ சுசந்தஜெயலத் ஆகியோர் கருத்துக்களை முன் வைத்தமை குறிப்பிடத்தக்கது.


பிறசெய்திகள்





