ஒவ்வொரு குடும்பத்தையும் பட்டினியிலிருந்து பாதுகாக்க விசேட திட்டம்

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கினை ஒவ்வொரு வீட்டுக்கூறுகளுக்கும் அதனை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான கிராமிய பொருளாதார புத்துயிரூட்டல் கேந்திர நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்வகைப்பட்ட அனைத்து செயற்பாடுகளையும் இணைத்த வகையில் ஒருங்கிணைந்த ஒரு பொறிமுறையினை ஸ்தாபித்து அமுல்படுத்துவது குறித்து தற்போது தேசிய மட்டத்திலே கலந்துரையாடப்பட்டது என யாழ்.மாவட்ட அரச அதிபர் மகேசன் தெரிவித்தார்.

உணவு கையிருப்பு பாதுகாப்பு மற்றும் போசாக்கினை உறுதிப்படுத்துவதற்கான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்குத் தொடர்பாக தேசிய மட்டத்திலே கரிசனை செய்யப்பட்டிருக்கின்றது.

அந்தவகையிலே உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கினை ஒவ்வொரு வீட்டுக்கூறுகளுக்கும் அதனை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான கிராமிய பொருளாதார புத்துயிரூட்டல் கேந்திர நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்வகைப்பட்ட அனைத்து செயற்பாடுகளையும் இணைத்த வகையில் ஒருங்கிணைந்த ஒரு பொறிமுறையினை தாபித்து அமுல்படுத்துவது குறித்து தற்போது தேசிய மட்டத்திலே கலந்துரையாடப்பட்டிருந்தது.

கடந்த வாரம் தேசிய மட்ட குழு கூடி அதனை அங்குரார்ப்பரணம் செய்யப்பட்டிருந்தது. இந்த குழுக்கள் மாகாண மற்றும் மாவட்ட மட்டம், பிரதேச செயலகங்கள் அதே போன்று கேந்திர மையங்களாக கிராமிய மட்டங்களிலும் இந்த நிலை ஏற்படுத்தப்பட உள்ளது.

அந்தவகையில் இன்றைய நிலையில் இந்த மாவட்ட மட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான ஒருங்கிணைந்த ஒரு பொறி முறையினை மாவட்டச் செயலகம் தலைமை தாங்கி அனைத்து அரச திணைக்களங்கள், தனியார் துறையினர், வர்த்தக துறையினர், அரச சார்பற்ற நிறுவனங்கள், பொது மக்கள் அமைப்புக்கள் போன்ற அனைத்தும் சேர்ந்து ஒரே இலக்கில் இந்த செயற்பபாட்டினை முன்னெடுத்து உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதோடு ஒவ்வொரு குடும்பத்தையும் பட்னியிலிருந்து பாதுகாக்கத்துக்கொள்வதற்கு அதேபோன்று ஒவ்வொரு குடும்பங்களில் உள்ள போசாக்கு இன்மையினை தவிர்த்துக்கொள்வதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டிய தேவை இருக்கிறது.

எங்களுடைய பிரதான இலக்கான, அனைத்து பிரஜைகளுக்கும் நாட்டில் நிலவும் எந்தவொரு நிலைமையின் கீழும் நல்லதொரு ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான உணவினையும், அந்த உணவினை நியாயமான விலையிலே பெற்றுக்கொள்வதனை உறுதிப்படுத்தப்பட வேண்டிய கடமை இருக்கிறது.

இது ஒரு முக்கியமான பொறிமுறை, தேசிய முன்னுரிமை உள்ள பொறிமுறை, ஆகையால், இதனை நாம் யாழ் மாவட்டத்திலே அதனை முறையாக அமுல்படுத்துவதற்கு இன்று மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான குழு அங்குரார்ப்பரணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply