
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் வைத்தியசாலைக்கு முன்னாள் வைத்து, மோட்டார் சைக்கிள் மாடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த மாடு சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்து தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் தோப்பூர் – அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞனே காயமடைந்துள்ளார்.
தோப்பூர் பிரதேசத்தில் உள்ள வீதிகளில் இரவு வேளையில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் மேலும் விபத்துக்குள் ஏற்படாத வகையில் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தோப்பூர் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
பிறசெய்திகள்





