
குருதியில் சீனியின் அளவைக் குறைக்கும் புதிய மருந்தை ருஹுணு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளது.
இதுதொடர்பில் ஆய்வுக் குழுவின் தலைவரும், மருத்துவ பீடத்தின் உயிரியல் துறை பேராசிரியருமான அனோஜா அத்தநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது:
கொவ்வை இலையில் உள்ள இரசாயன பதார்த்தங்கள் தொடர்பில் நீண்டகால ஆய்வுக்கு பின்னரே இந்த மருந்தை தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆய்வின் முடிவுகளின்படி கொவ்வை செடியின் இலைகளில் உள்ள இரசாயன பதார்த்தங்கள் இரத்தத்தில் உள்ள சீனியை குறைக்க வல்லவை என ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
அதனைப் பயன்படுத்தியே மருந்து வில்லைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த மருந்து மருத்துவ ஆராய்ச்சிக்கு அனுப்பப்பட்டது.
இந்த பரிசோதனை 158 நீரிழிவு நோயாளிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது. இந்த மருந்து அவர்களின் குருதியில் சீனியின் அளவைக் குறைத்து வெற்றியளித்துள்ளது.
எனினும் கொவ்வை செடியை வெறுமனே சாப்பிடுதல் ஆகாது– என்று அவர் மேலும் தெரிவித்தார்.





