18–25 வயதுக்குட்பட்ட எச்ஐவி தொற்றாளர் நாட்டில் அதிகரிப்பு!

18 முதல் 25 வயதுக்குட்பட்ட எச்ஐவி நோயாளிகளின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்துள்ளது என தேசிய எச்ஐவி தடுப்பு திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் பாதிக்கப்பட்ட 50 பேரில் 18 பேர் வரையில் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சுமார் 2 ஆயிரத்து 300 பேர் தடுப்பூசியை எடுத்துக் கொள்கின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் என இனங்காணப்படாத சுமார் ஆயிரத்து 400 பேர் சமூகத்திலுள்ளனர் எனவும்  அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply