
உயிர்கொல்லி ஹெரோய்னுக்கு அடிமையான தமது பிள்ளைகளை, புனர்வாழ்வுக்கு பெற்றோர் ஒப்படைக்கும் சம்பவங்கள் யாழ். மாவட்டத்தில் இந்த வாரம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உயிர் கொல்லி ஹெரோய்னுக்கு அடிமையான இளைஞனால் அவரது சகோதரி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தப் பெண் தவறான முடிவு எடுத்து உயிரிழந்திருந்தார்.
இதன் பின்னர் உயிர் கொல்லி ஹெரோய்னுக்கு அடிமையான தமது பிள்ளைகளை, புனர்வாழ்வுக்காக பெற்றோர் மருத்துவமனைகளில் ஒப்படைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. நீதிமன்றங்கள் ஊடாகவும் புனர்வாழ்வுக்கு அதிகளவானோர் அனுப்பப்பட்டு வருகின்றனர்.





