மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்! – விசேட வைத்தியர் கோரிக்கை

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பட்சத்தில் அவர்களை வைத்திய ஆலோசனை மற்றும் சிகிச்சைக்காக அனுப்ப வேண்டியது அனைவரினதும் பொறுப்பு என கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் மனநல விசேட வைத்தியர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் மனநலம் குன்றியவர்கள் உயிர்களை மாய்த்துக் கொள்வதில் இருந்து தடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவரேனும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் போது செயற்படும் விதம் தொடர்பில் முழுமையான நிலைப்பாட்டுக்கு யாருக்கும் வர முடியாது.

இதுபோன்ற நிலமைகளை குறைத்துகொள்வதற்காக பல ஆலோசனை சேவைகள் நாட்டில் இடம்பெறுகின்றன.

எனினும், மக்கள் அது தொடர்பான தெளிவுகளை பெற்றுக் கொள்வதற்கு அதிக அளவு ஆர்வம் காட்டுவதில்லை.

இதன்காரணமாகவே மனநலம் பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் மக்கள் தவறான தீர்மானங்களை எட்டுவதாக கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் மனநல விசேட வைத்தியர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply