
தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்ற கட்டடத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
அதாவது, இதன் போது வவுனியாவை மாநகர சபையாக உயர்த்துவதற்காக வவுனியாவ எனப் பெயர் குறிப்பிடப்பட்ட கடிதம் தொடர்பில் பிரதமருக்கு எடுத்துக் கூறிய நிலையில் குறித்த கடிதத்தில் வவுனியாவ என எழுதப்பட்டதை மாற்றி இவ்வளவு காலமும் எழுதப்பட்டதைப் போன்று வவுனியா என எழுதப்பட வேண்டும் எனக் கூறினர்.
இதற்கு, பிரதமர் நீங்கள் ஏன் இதனை பெரிது படுத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பிய நிலையில் குறிக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி வி விக்னேஸ்வரன் கொழும்பு றோயல் கல்லூரியில் நானும் நீங்களும் கல்வி கற்றோம்.
அக்காலத்தில், கல்வி கற்பித்த ஆசிரியர் ஒருவரின் பெயரைக் கூறிய விக்னேஸ்வரன் அவரை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள் அவரிடமும் கல்வி கற்றிருப்பீர்கள்.
அவர், அடிக்கடி கூறுவார் சிறு சிறு விடயங்களில் பிழை விடும்போது கவனிக்காமல் விட்டால் அது ஒருநாள் பெரிய பிழையாக வந்து பிரச்சனையை ஏற்படுத்தி விடும் என கூறுவார் அதையே நான் இப்போது கூறுகிறேன் வவுனியா என்ற பெயரை வவுனியாவாகவே விடுங்கள் எனக் கூறினார்.
இதன்போது, சிரித்த பிரதமர் தினேஷ் குணவர்த்தன குறித்த கடிதத்தில் பிரசுரிக்கப்பட்ட வவுனியாவ என்ற பெயரை மாற்றுவதற்கு இணக்கம் தெரிவித்தார்.
கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்திற்கான கணக்காளர் நியமிக்கப்படாமை மற்றும் பொது நிர்வாக உள்நாட்டு அலுவலகங்கள் அமைச்சின் இணையதளத்தில் கல்முனை தமிழ் உப பிரதேச செயலகம் என்ற பெயர் நீக்கப்பட்டமை தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரத்தில் தமிழ் முஸ்லிம் தரப்புக்குள் கணக்காளர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றது.
ஆகையால் தற்காலிகமாக தமிழ் மொழி தெரிந்த சிங்களக் கணக்காளர் ஒருவரை தற்காலிகமாக நியமிப்பதற்கு தான் இணங்குவதாக தெரிவித்தார்.
இதற்கு பிரதமரை சந்திக்க சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பின்னர் தற்காலிகமாக ஒருவரை நியமிப்பதற்கு இணக்கம் காணப்பட்டதாக அறிய கிடைத்தது.
குறைத்த காலம் உரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சால்ஸ் நிர்மலாநாதன் கோவிந்தன் கருணாகரன், கலையரசன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்





