கொழும்பில் போராட்டம்: பிக்குகள், பெண்கள் உட்பட 84 பேர் கைது

கொழும்பு,செப் 24

மருதானை, டீன்ஸ் வீதிப்பகுதியில் ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்த 84 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 பெண்கள், 2 பௌத்த பிக்குகள் உட்பட 84 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக சோசலிச இளைஞர் சங்கத்தினால் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில், இந்த ஆர்பாட்ட பேரணியை கலைக்க கண்ணீர்புகை மற்றும் நீர்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply