எட்வர்ட் ஸ்னோடனுக்கு ரஷ்ய குடியுரிமை: புடின் நடவடிக்கை

அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு முகவர் எட்வர்ட் ஸ்னோடனுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரஷ்ய நாட்டுக் குடியுரிமை வழங்கியுள்ளார். இதற்கான ஆவணத்தில், அண்மையில் அவர் கையெழுத்திட்டுள்ளார். .

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் முன்னாள் ஒப்பந்ததாரரான ஸ்னோடன், அமெரிக்க அரசாங்க கண்காணிப்பு திட்டங்களை விவரிக்கும் ரகசிய ஆவணங்களை கசியவிட்டார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்காக 2013 முதல் ரஷ்யாவில் வசித்து வருகிறார்.

அவருக்கு 2020 இல் நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது, தனது அமெரிக்க குடியுரிமையை கைவிடாமல் ரஷ்ய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஆவர் அப்போது கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *