ஜனாதிபதி ரணில் – ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இடையே பேச்சுவார்த்தை

ஜப்பான், செப்.27

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடல் ஜப்பானின் டோக்கியோ நகரில் ஆரம்பமாகியுள்ளது. ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று இரவு டோக்கியோவை சென்றடைந்தார்.

அங்கு, ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் இன்று (27) ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply