<!–
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை 2024 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருக்க ஐக்கிய மக்கள் சக்தி அனுமதிக்காது என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், பட்டினிக்கு தீர்வு காணத் தவறினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அவர் எங்கிருந்தாலும் சுற்றி வளைக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள அவர், தாங்கள் இன்னும் சில நாட்கள் மட்டுமே காத்திருப்போம் என்றும் அவர் வசிக்கும் பகுதியை சுற்றி வளைப்போம் என்றும் அவரை நகர அனுமதிக்காமல் ஒரு இடத்தில் அடைத்து வைப்போம் என்றும் குறிப்பட்டுள்ளார்.
குடிமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதிக்கு போதிய கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும் தங்களின் பொறுமை மலிந்து வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






