கைது செய்யப்பட்ட இலங்கை ஏதிலிகளில் மூவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நீக்கம்!

இந்திய கேரளாவில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட 13 இலங்கை ஏதிலிகளில் மூவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை காவல்துறையினர் விலக்கிக்கொண்டனர்.

அதாவது, 14 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் மற்றும் 5 வயது சிறுவன் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களே விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தநிலையில் சிறுமிகள் இருவரும் கோழிக்கோட்டில் உள்ள அரசு பெண்கள் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுவன் தனது தாயுடன் திருவனந்தபுரம் அட்டகுளங்கரா சீர்திருத்த இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

கொல்லத்தில் உள்ள தங்கசேரியில் உள்ள வாடி துறைமுகத்தில் இருந்து இந்த 13 இலங்கை ஏதிலிகளும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள், கொல்லத்தில் இருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா அல்லது கனடா செல்ல திட்டமிட்டிருந்ததாக கேரள காவல்துறையினர் தெரிவித்தனர்.

எனினும் இவர்களின் பயணத்திற்கு ஏற்பாடுகளை செய்து பணம் பெற்றுக்கொண்ட முகவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

பிற செய்திகள்

Leave a Reply