நாட்டில் உடனடியாக இரண்டு தேர்தல்கள் நடாத்தப்பட வேண்டும்! முஸ்லிம் காங்கிரஸ்

நாட்டில் உடனடியாக இரண்டு தேர்தல்கள் நடாத்தப்பட வேண்டும் என முஸ்லீம் காங்கிரசின் முக்கிஸ்தர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ள அரசுக்கு மக்கள் ஆணை இல்லை என்பது தெரியும். இந்த சூழ்நிலையில் தேர்தல் உடனடியாக நடாத்தப்பட வேண்டும். குறைந்தது உள்ளுராட்சி மன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும்.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான சட்டத் திருத்தத்தை அரசு பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

பாராளுமன்றத் தேர்தல் நடாத்துவதற்கு இன்னமும் 2 வருடங்கள் சட்ட ரீதியாக இருப்பதால், மிகுதித் தேர்தல்களை உடனடியாக நடாத்த வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளை ஒக்டோபர் மாதத்துக்கு பின்னர் எடுப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது பற்றி நாமும் ஆணைக்குழுவுக்கு தெரிவித்துள்ளோம்.- என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply