
கொழும்பு,செப் 27
கொழும்பு – பாலத்துறை (தொட்டலங்க) பகுதியிலுள்ள குடியிருப்புத் தொகுதியொன்றில் பரவிய தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முப்படையினர், தீயணைப்புப் பிரிவினர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக சமன் ஏக்கநாயக்க அறிவித்துள்ளார்.
இதேவேளை இந்த பகுதியில் உள்ள சுமார் 50 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் மேலும் பல வீடுகளுக்கு பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.





