வயிற்றில் கொக்கேய்ன் மாத்திரையை வைத்திருந்தவர் கைது

கொழும்பு,செப் 28

43 வயதான உகண்டா நாட்டு பிரஜை ஒருவர் வயிற்றில் பல கொக்கேய்ன் மாத்திரைகளை மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவரை கட்டுநாயக்க சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் உகண்டாவிலிருந்து கட்டார் ஊடாக இந்த நாட்டுக்கு வந்துள்ளார்.

சந்தேகநபரின் வயிற்றை பரிசோதனை செய்த போது கொக்கெய்ன் அடங்கிய 17 மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கொக்கேய்னின் சந்தை பெறுமதி சுமார் 12 மில்லியன் ரூபா என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளினால் சந்தேகநபர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply