தேர்தலை மார்ச் நடாத்த முடிவு: பிரதமரிடம் தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு

கொழும்பு, செப்.29

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு இன்றைய தினம் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன விடுத்துள்ள கோரிக்கைக்கு அமையவே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ள தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்குரிய தேர்தலை எதிர்வரும் 2023 ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply