
நாங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கப் போகின்றோம். அதற்கான பேச்சை விரைவில் ஆரம்பிக்கப் போகின்றோம் என்றுகூறி தொடர்ச்சியாக தமிழ் மக்களை ஏமாற்றாமல் , பேச்சுக்களை இதயசுத்தியுடன் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார் .
தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் தமிழ் , முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு விரைவில் பேச்சை ஆரம்பிக்கும் ‘ என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்திருந்தார் .
இது தொடர் பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்ததாவது
தமிழ் மக்கள் பல்வேறுபட்ட பிரச்சினை களை எதிர்நோக்கி வருகின்றனர் . இதில் முதன்மையானது தேசிய இனப்பிரச்சினை .
1949 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பல்வேறு விதமான முயற்சி களை மேற்கொண்டு வருகின்றோம் . தீர்வு விடயம் சம்பந்தமாக தமிழ்த் தரப்பினர் திறந்த மனதுடன் இலங்கை அரசுடன் பேச்சை நடத்தியுள்ளனர். ஒப்பந்தங் களையும் செய்துள்ளனர் .
கொழும்பிலும் , சென்னையிலும் , டில்லியிலும் மற்றும் வெளிநாடுகளிலும் நடைபெற்ற பேச்சின்போது நியாயமான கோரிக்கை களை இலங்கை அரசுகளிடம் தமிழ்த் தரப்பினர் முன்வைத்திருந்தனர் .
ஆனால் , அந்தக் கோரிக்கைகள் இலங்கை அரசுகளால் நிராகரிக்கப்பட் டிருந்தன . தமிழ்த் தலைவர்களுடன் செய்துகொள்ளப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் இலங்கை அரசுகளால் கிழித்தெறியப்பட்டும் உள்ளன .
இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுடன் தீர்வு விடயம் தொடர்பில் 17 சுற்றுப் பேச்சைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்தியிருந்தனர் .
18 ஆவது சுற்றுப் பேச்சுக்குச் சென்ற நாம் , காத்திருந்து ஏமாந்து வந்தோம் . அந்தப் பேச்சு மேசைக்கு மஹிந்த அரசு வரவில்லை . மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசில் தீர்வுக்கான பேச்சை முன்னெடுக்கப் பலவிதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன .
ஆனால் , அரசியல் சதியால் அவையும் தோல்வியில் முடிவடைந்தன . ஆனபடியால் , ‘ நாங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கப் போகின்றோம் ; அதற்கான பேச்சு விரைவில் ஆரம்பிக்கப் போகின்றோம் ‘ என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறி மேலும் எங்களைக் காத் திருக்க வைக்காமல் , ஏமாற்றாமல் ஒரு முறையான ஒழுங்கின் பிரகாரம் பேச்சை ஆரம்பிக்கவேண்டும்.
பிரச்சினை களுக்கு விரைந்து நியாயமான தீர்வைக் காணவேண்டும் . பிரச்சினைகளை அரசு விரைவாகத் தீர்க்காவிட்டால் உள்ளக சுயநிர்ணய உரிமை எமக்கு மறுக்கப்படுகின்றது என்றே அர்த்தம் . அதன் நிமித்தம் வெளியக சுயநிர்ணய உரிமையை நாங்கள் நாட வேண்டி வரும்- என்றார் .
பிற செய்திகள்





