இலங்கைக்கான கடனுக்கு பணிப்பாளர் சபை எப்போது அங்கீகாரம் வழங்கும் என கூற முடியாது-IMF

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் கடனுக்கு தமது பணிப்பாளர் சபை எப்போது அங்கீகாரம் வழங்கும் என நிச்சயமாகக் கூற முடியாது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது .

கடன் வழங்குநர்களுடனான . கடன் மறுசீரமைப்பு பேச்சு வார்த்தையின் வெற்றியைப் பொறுத்து காலம் தீர்மா னிக் கப்படும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி யொருவர் கூறினார் .

ஆயினும் , சர்வதேச நாணய நிதி யத்துடன் , பணியாளர் மட்ட உடன்பாட்டின் ஊடாக அங்கீ கரிக்கப்பட்ட 2.9 பில்லியன் பொலருக்கு , எதிர்வரும் டிசெம் பர் மாதத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அங்கீகாரம் வழங்கும் என இலங்கை அரசாங்கம் ஊகிக்கிறது .

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக்குழுவின் தலைவர் பீற் றர் ப்ரூவர் மற்றும் இலங்கை தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் நிக்கி ஏஷியா இணையத்தளத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் இலங்கைக்கான கடன் தொடர்பில் விளக்கமளித்துள்ளனர் .

கடன் மறுசீரமைப்பு பேச்சுகளை நேரம் எடுப்பதால் . நிதியை வழங்கும் காலக்கெ டுவை எதிர்வுகூறுவது மிகவும் கடினம் . சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சுக்களை விரைவு படுத்தவேண்டும் .

அப்போதுதான் , எதிர்கொள்ளும் நெருக்கடியிலிருந்து இலங்கை விரைவாக வெளியேற முடியும் என அந்தக் கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர் நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியின் தரவுகளுக்கமைய சீனா , ஜப்பான் மற்றும் இந் தியா ஆகியவை இலங்கையின் முதன்மையான மூன்று இருதரப்பு கடன் வழங்குநர்க ளாக உள்ளனர் .

இலங்கைக் கான மொத்தக் கடனில் சீனா 52 வீதமும் , ஜப்பான் 19.5 வீதமும் மற்றும் இந்தியா 12 வீதமும் வழங்கியுள்ளன.

பிற செய்திகள்

Leave a Reply