நாட்டின் ஆடை ஏற்றுமதித் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சி!

நான்காவது காலாண்டில் ஆடைகள் மற்றும் தொழில் துறை ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது என்று சுதந்திர வர்த்தக வலய முதலீட்டாளர்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது .

நாடு எதிர்நோக்கியுள்ள பொரு ளாதார நெருக்கடியே இதற்கு பிரதான காரணம் என அந்த சம்மேளனத்தின் பொதுச் செய லாளர் தம்மிக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் .

சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் சுதந் திர வர்த்தக வலயத்தில் அமை யப் பெறாத சிறிய மற்றும் நடுத்தர ஆடைத் தொழிற்சா லைகள் மற்றும் தொழிற் றுறை ஏற்றுமதி நிறுவனங்கள் பல மூடப்பட்டுள்ளன .

இதற்கமைய 15 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என்றும் , சில நிறுவனங்கள் உற்பத்தியை கைவிட்டுள்ளன என்றும் சுதந் திர வர்த்தக வலய முதலீட்டாளர்களின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் தம்மிக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் .

பிற செய்திகள்

Leave a Reply