நீதிமன்ற உத்தரவையும் மீறி அமைக்கப்படும் மதுபானசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!(படங்கள் இணைப்பு)

நீதிமன்ற உத்தரவையும் மீறி புதிய மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சி பெரிய பரந்தன் பிரதேசத்தில் புதிய மதுபானசாலை வழக்கத்துக்கு முன்பாக இன்று (30.09.2022) மீண்டும் பெரிய பரந்தன் பிரதேச மக்கள் மற்றும் கிரமட்ட அமைப்புக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவையும் மீறி புதிய மதுபானசாலை அமைய உள்ள இடத்திற்கு அருகில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி, மற்றும் விஞ்ஞானக் கல்வி நிலையம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் காணப்படுகின்றன.

பெரிய பரந்தன் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலான குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்கள்.

எனவே தமது பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைவதானது பெரும் பொருளாதார மற்றும் கலாச்சார பாதிப்புக்களையும் ஏற்படுத்தும்.எனவே குறித்த மதுபானசாலை விஷயத்தில் பிரதேச மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் கருத்தில் கொண்டு அதற்கான அனுமதி வழங்கியதை ரத்து செய்யக் கோரி மக்கள் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply