நுவரெலியா மாவட்டத்தில் ஏற்படும் இடர்பாடுகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் செயலமர்வு 30.09.2022 அன்று நுவரெலியா எல்பின் விருந்தக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நுவரெலியா இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் வேல்ட்விசன் நிறுவன அதிகாரிகள் இனைத்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தசேன கலபொட பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் இடர் முகாமைத்துவ மத்திய நிலைய உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்..
இதன்போது நுவரெலியா மாவட்டத்தில் ஏற்படுகின்ற அனர்த்தங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் ஊடகவியலாளர்கள் எவ்வாறு தெளிவுபடுத்த வேண்டும்.
ஆபத்தான நேரங்களில் மக்களை பாதுகாப்பதற்கு ஊடகவியலாளர்களின் பங்களிப்பு முக்கியம் தற்போது நாட்டில் உள்ள முப்படையினர் நேரம் காலம் பாராமல் செயல்படுகின்றனர் அதேபோன்று ஊடகவியலாளர்களும் செயல்படுகின்றனர்.
அனர்த்தம் வரும்போது மக்களை பாதுகாக்க வேண்டுமானால் அரசு, அரசு சார்பற்ற அமைப்புகளின் அதிகாரிகளின் உதவி வைத்திய பிரிவு வாகன உதவி என பலரின் உதவி தேவைப்படுகிறது.இது போன்ற உதவிகள் இருந்தால் மாத்திரமே மக்களை அணர்த்தங்களில் இருந்து பாதுகாக்க முடியும் என அணர்த்த முகாமை துவ அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுப்படுத்தினர்.


பிற செய்திகள்





