அரசாங்கத்தை கவிழ்க்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்-குமார வெல்கம அழைப்பு!

அரசாங்கத்தை கவிழ்க்க ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, அனுர பிரியதர்சன யாபயன மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply