கொழும்பு – அவிசாவளை வீதி மூடல்

கொழும்பு,செப் 30

கொழும்பு – அவிசாவளை வீதியில் வெல்லம்பிட்டிய சந்தியிலிருந்து கொட்டிகாவத்தை சந்தி வரையிலான வீதி வார இறுதியில் தற்காலிகமாக மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாளை (01) இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை 05.00 மணி வரை குறித்த வீதி மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடுவெலயிலிருந்து ஒருகொடவத்தை வரையிலான நீர் குழாய்களின் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாகவே குறித்த வீதி தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply