
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் இணைய விளையாட்டுக் களுக்கு அடிமையாகி – சிகிச்சைக்கு வரும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன. அத்துடன், அலைபேசிகளை அதி
களவில் பயன்படுத்தும் மாணவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் சந்தர்ப்பங்களும் பதி வாகியுள்ளன –
இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் பேராசிரியர் கீதாஞ்சலி சத்தியதாஸ் தெரிவித்துள்ளார்.
பெற்றோர் தமது பிள்ளைகளின் நடவடிக்கையில் கூடுதல் அக்கறையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
தற்காலத்தில் அலைபேசிகளின் பயன்பாடுகள் இளைஞர்களிடம் மட்டுமல்லாமல் மாணவச் சமூகத்திடமும் தீவிரம் பெற்றுள்ளன. தரம் ஒன்பதுக்கு மேற்பட்ட மாணவர்களில் 97 வீதமானவர்கள் இன்று அலைபேசிகளைச் சொந்தமாக வைத்திருப்பவர்களாக – அல்லது அதீதமாகப் பயன்படுத்துகின்றவர்களாக இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக 12 வயது தொடக்கம் 17 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்கள் இணைய விளையாட்டுக்களில் (வீடியோ கேம்) தீவிரமாக ஈடுபடுகின்றனர். இந்த விளையாட்டுக்கள் ‘சவால் நிறைந்தவை’ என்ற போர்வையின் கீழ் மாணவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அதற்கு தாமாகவே அடிமையாகின்றனர்.
இணைய விளையாட்டுக்களுக்கு சிறுவர்கள் அடிமையாகும்போது அது சிறுவர்களின் உடல் நலனில் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. நீரிழிவு, உயர் குருதி அழுக்கம், கொலஸ்ரோல், நோய் எதிர்ப்புத் தன்மை குறைவடைதல், என்புத்தொகுதிகள் சார்பான நோய்கள் என்பன மாணவர்கள் மற்றும் சிறுவர்களை ஆட்கொள்கின்றன.
ஒரு மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்தில் 16 தடவைகள் கண்களைச் சிமிட்ட வேண்டும். இணைய விளையாட்டுக்களில் பார்வைக் குவிவைச் செலுத்தி ஈடுபடுவதால் இந்தக் கண்சிமிட்டல் 8 தடவைகளாகக் குறைகின்றன. இதனால் பார்வைக் குறைபாடு மற்றும் பார்வை இழப்பு போன்ற பிரச்சினைகளும் மாணவர்களுக்கு ஏற்படுகின்றன.
எனவே பெற்றோர் தமது குழந்தைகளின் அலைபேசிப் பாவனையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோரின் கண்டிப்பும் கவனக்குவிவான செயற்பாடுமே பிள்ளைகளின் உள, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் – ரீஎன்றார்.





