போதைப்பாவனையை கட்டுப்படுத்த பிரதேசங்கள் ரீதியில் வேலைத்திட்டம்

உயிர்கொல்லியான ஹெரோய்ன் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனைக் கட்டுப்படுத்த பிரதேசங்கள் ரீதியில் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

போதைப்பொருள் பாவனைக் கட்டுப்படுத்த பிரதேச மட்டம், மாவட்ட மட்டம் மற்றும் மாகாண மட்டத்தில்  அனைத்துத் தரப்பினரதும் பங்களிப்பு அவசியம்.

போதைப்பொருளைக் கட்டுக்குள் கொண்ட அனைவரதும் ஒத்துழைப்பை வழங்குவதுடன் பொறுப்பானவர்கள் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்.

தற்போது பிரதேச மட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகமாகக் காணப்படுகின்ற பிரதேசங்களை அடையாளப்படுத்தி பிரதேச செயலாளர்களுடன் இணைந்து விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன்  பாதுகாப்புத் தரப்பினருடன் விசேடமாக கலந்துரையாடி  அனைவரினதும் ஒத்துழைப்புடன் போதைப்பொருள் தடுப்பு  முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் – என்றார்.

Leave a Reply