வவுனியாவில் உயிர்கொல்லி போதைப்பொருளான ஹெரோய்னை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் வவுனியா போதை ஒழிப்புப்பிரிவினரால் இருவர் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைதாகினர்.
வவுனியா தோணிக்கல் பகுதியிலுள்ள வீடொன்றில் 219 மில்லிகிராம் ஹெரோய்னும் கோயில்பகுதியில் 129 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் அவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் 51 மற்றும் 44 வயதான சந்தேகநபர்கள் இருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்
சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.





