
இனத்தின் பெயரால் முஸ்லீம்களின் வாக்குகளை பெற்று தெரிவு செய்யப் படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் திருமலை முஸ்லீம்களுக்கு துரோகமிழைத்து விட்டார் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம் .எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.
கிண்ணியா விழிப்புணர்வு தகவல் மையத்தில் இன்று (30) மாலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முஸ்லீம்களின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப் பட்ட போதிலும் வாக்களித்த மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் மக்கள் ஏமாற்றப் படுகின்றார்கள்.
கடந்த காலங்களில் முஸ்லீம்கள் மீது இன,மத, வெறுப்புணர்வுகளை தூண்டி பாரிய அழிவுகளை ஏற்படுத்திய 20 நாள் குழந்தை உட்பட பல நூறு ஜனாஸாக்களை எரித்த, காணிகளை திட்டமிட்டு அபகரிக்கின்ற கொடுங்கோளர்களின் அரசுக்கு முட்டுக் கொடுத்தன் மூலம் வாக்களித்த முஸ்லீம்களின் உணர்வுகளுக்கு துரோகமிழைத்துள்ளார் எனவும் அவர் கூறினார்.
பிற செய்திகள்





