
கொழும்பு – அவிசாவளை லோவ் லெவல் வீதியின், வெல்லம்பிட்டி சந்தி முதல் கொட்டிகாவத்தை சந்தி வரையான பகுதி, நாளை இரவு 10 மணிமுதல், நாளை மறுதினம் மாலை 5 மணிவரை தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
காவல்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும், கடுவலை முதல் ஒருகொடவத்தை பகுதி வரையான குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் காரணமாக, இந்த போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, குறித்த காலப்பகுதியில், சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்





