இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் வடக்கு மாகாணத்தில் எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பாலியல் நோய் மற்றும் எச். ஐ. வி. தடுப்புப் பிரிவின் விசேட மருத்துவ அதிகாரி தக்சாயினி மகேந்திரநாதன் குறிப்பிட்டார்.
அதிகரித்த போதைப்பொருள் பாவனையும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்று என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மன்னார் மாவட்டத்தில் இதுவரையில் 11 நோயாளர்கள் அடையாளம்காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மருந்துகளை பெற்றுக்கொள்வதிலும் பல சவால்கள் நிலவுகின்றன.
நாட்டில் நிலவும் நெருக்கடியால் உரிய மருந்துகளுக்கு பதிலாக மாற்று மருந்துகளை பயன்படுத்த வேண்டிய
நிலை ஏற்பட்டுள்ளதுடன், நோய் தொடர்பிலான முழுமையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெ டுப்பதற்கு போதிய போக்குவரத்து வசதிகள் தேவைப்படுகின்றன – என்றும் அவர் கூறினார்.
பிற செய்திகள்





