
பத்திரிகைகளைப் பார்த்தால் வெட்கமாக இருக்கின்றது . எமது சமுதாயத்தை கேவலப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் . நாங்கள் போதைப்பொருளுக்கு அடிமையான கூட்டம் என்று பட்டம் சூட்டிக்கொண்டிருக்கின்றார்கள் இவ்வாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ஆர்.வரதீஸ்வரன் தெரிவித்தார் .
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரியின் பாட சாலை கட்டடத் தொகுதி திறப்பு விழா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்புடன் நடைபெற்றது .
நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே வடக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலர் மேற்கண்டவாறு கூறினார் .
அவர் தனது உரையில்,
பல சிரமங்களுக்கு மத்தியில் உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் எமது மாகாணம் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது . மூன்றாவது இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறும் வகையில் எங்கள் மாணவர்கள் திட்டமிட்டு கற்கவேண்டும் .
யாழ் . மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளைப் பார்க்கும்போது அதி களவான மாணவர்கள் வர்த்தக மற்றும் கலைத்துறையைத்தான் தெரிவுசெய்து அதில் சிறந்த பெறுபேற்றை பெற்றிருக்கின்றார்கள் .
அவர்களுடைய எதிர்காலம் சற்றுக் கேள்விக்குறியானதுதான் . தொழில்நுட்பம் சார்ந்த கல்வியை தெரிவு செய்வதன் ஊடாக எதிர் காலத்தை சிறப்பானதாக மாற்றியமைக் கலாம் .
பட்டதாரியானால் வேலை கிடைக்கும் என்று யாரும் நினைத்து விடாதீர்கள் . எந்தவொரு காலத்திலும் இனி பட்டதாரிக்கு வேலை கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை .
நீங்களாகத்தான் வேலைகளைத் தேடிக்கொள்ளவேண்டும் . பத்திரிகைகள் அண்மைக்காலமாக ஏன் இப்படி எழுதிக் கொண்டிருக்கின்றன என்பது எனக்குத் தெரியவில்லை . பத்தி ரிகைகளைப் பார்ப்பதற்கே வெட்கமாக இருக்கின்றது .
போதைப் பொருளுக்கு அடிமையாகிவிட்டதாகக் கூறிக்கொண்டிருக்கின்றார்கள் . அதில் உண்மை இருக்கிறது . ஆனால் , தொடர்ச்சியாக கேவலப்படுத்திக் கொண் டிருக்கின்றார்கள் .
தமிழர்களையும் எங் களுடைய மாகாணத்தையும் எங்களு டைய பண்பாட்டையும் மிகக் கேவலமாக அவர்கள் சித்திரித்துக் கொண்டிருக்கின் றார்கள் . உண்மையிலேயே எங்களுடைய மாண வர்களுக்கு நாங்கள் நல்ல விடயங் களை புகட்டவேண்டும் .
எங்களுடைய பாடசாலை ஆசிரியர்கள் நேரமில்லாவிட் டாலும் அதற்கென ஒரு நேரம் எடுத்து நல்ல விடயங்களை மாணவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள் . இரண்டு பாட வேளைகள் உள்ள ஆசிரியர்கள் ஒரு பாட வேளையாவது மாணவர்களுக்கு போதைப்பொருள் பாவனை அல்லது பொது விடயங்கள் தொடர்பாக எதிர்காலத்தில் என்ன ஏற்படும் என்பது தொடர் பாக விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
நாங்கள் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வை தொடர்ந்து முன்னெடுத் தால் மாணவர்களுக்கு அதில் ( போதைப் பொருளில் ) ஆர்வம் வந்துவிடும் . தெரி யாதவர்களுக்கு சொல்லிக் கொடுத்தது போலும் அமைந்துவிடும் .
மாணவன் அதை அறிவதற்கு முற்படுவான் . அவ் வாறான நிகழ்வை நாங்கள் மாணவர்க ளுக்கு சொல்லக்கூடாது . நாங்கள் தீமை களை மட்டுமே சுட்டிக்காட்டவேண்டும் . போதைப்பொருளை பயன்படுத்தினால் என்ன நடக்கும் , உயிருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் , என்பவற்றைச் சொல்லிக் கொடுங்கள் என்றார் .
பிற செய்திகள்





