
இலங்கையில் ஐந்து வருட சேவையை முடித்துவிட்டு தனது நாடு திரும்பியுள்ள கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் பிரதமர் தினேஷ் குணவர்தனவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.
அங்கு இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் தற்போதைய பொருளாதார சவால்களை இலங்கை எவ்வாறு எதிர்கொண்டு வருகின்றது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
கடந்த காலத்திலிருந்து இலங்கைக்கு கனடா வழங்கிய ஆதரவிற்கும், குறிப்பாக அம்பாறை ஹார்டி நிறுவனத்தை நிறுவுவதற்கும், இலங்கைக்கு அத்தியாவசிய தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்குவதற்கும், பொதுப் போக்குவரத்திற்கு வழங்கிய ஆதரவுக்கும் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுத்து கடந்த சில மாதங்களில் நாட்டை ஸ்திரப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து மக்கின்னன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
கனடாவில் வாழும் இலங்கையர்களிடையே ஸ்திரமான வர்த்தகர்களை முதலீடு செய்ய ஊக்குவிப்பதாகவும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்த நாடு பெரும் உதவியாக இருக்கும்
தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் விளக்கினார்.
இந்த நிகழ்வில் பிரதமரின் மேலதிக செயலாளர் ஹர்ஷ விஜயவர்தன, கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும் வர்த்தகத் தலைவர் டேனியல் பூட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பிற செய்திகள்





