
குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு தொடர்ந்து திரிபோஷா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
திரிபோஷ பிரச்சினை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட குழுவினர் நேற்று பிற்பகல் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதேவேளை, குழந்தைகளின் போசாக்கு மட்டம் தொடர்பான இந்த உரையாடலில் மருத்துவ சங்கங்களின் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் கூட்டமைப்பின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் ஊடக செயலாளர் நிரோஷன பிரேமரத்ன ஆகியோர் இணைந்து கொண்டனர்.
பிற செய்திகள்





