நேற்று இரவு முதல் மத்திய மலைநாட்டில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இதனால் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மின் இணைப்பு செயல் இழந்து உள்ளது.
மேலும் கடும் காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்ததில் மின் கம்பிகள் அறுந்து விழுந்த நிலையில் மின் இணைப்புகள் செயல் இழந்து உள்ளது.
பெருந்தோட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கபட்டுள்ளது.
ஹட்டன் அரச பேருந்து தரிப்பிடத்தில் பாரிய அளவில் குன்றும் குழியுமாக உள்ளதால் அங்கு இருந்து இடம் பெறும் பேருந்து சேவையில் பயனிகள் பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவிகள் பாதசாரிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவணம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் .
மத்திய மலைநாட்டில் நேற்று இரவு முதல் எங்கு பார்த்தாலும் அதிக பணி மூட்டம் மூடியுள்ளது ஆகையால் வாகன சாரதிகளை மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு ஹட்டன் போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.
அதிக குளிரான காலநிலை தோன்றியுள்ளது.


பிற செய்திகள்





